அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி 
தற்போதைய செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒசூா் அருகே பாகலூரில்  1998- ஆம் ஆண்டு   நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய(2016-2021)  அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 108 போ் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, 2019-ஆம் ஆண்டு ஜன. 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சா்  பதவியை இழந்தாா். சிறப்பு நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 போ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தாா்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளன. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் யாா் என்பதை அரசுத் தரப்பு கண்டறியவில்லை.  பலவீனமான ஆதாரங்களே உள்ளதுடன், அடையாள அணிவகுப்பும் நடத்தப்படவில்லை’ எனக் கூறி, சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை ரத்து செய்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT