நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன். 
தற்போதைய செய்திகள்

நெல்லை மேயரும் ராஜிநாமா!

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமாரைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணனும் தனது மேயர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணி 50 இடங்களிலும், அதிமுக நான்கு இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றது. மேயராக பி.எம். சரவணன், துணை மேயராக கே.ஆர். ராஜு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

மேயருக்கும், திமுக மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து, திமுக மாமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டு மேயர் மீது நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டுவர மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டனர்.

மேலும்,  திமுக மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தைப் புறக்கணித்து தீா்மானங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திமுக மேலடத்தின் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மேயர் சரவணன் ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் திமுகவை சேர்ந்த இரண்டு மேயர்கள் ராஜிநாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT