முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.16 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பயணி கைது

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 5 ஜூலை, 2024 at 7:11 AM
கோப்புப்படம்
பகிர்:

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக பயணி ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் டிஆர்562 விமானம் வெள்ளிக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா்.

இதில்,பயணியொருவா் தனது தொடைகளில் அணிந்திருந்த முழங்கால் உறைக்குள் பேஸ்ட் வடிவிலான 1,605 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ. 1.16 கோடி என சுங்கத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அந்த ஆண் பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்து அலுவலா்கள் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →