தற்போதைய செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்தினார்.

DIN

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்தினார்.

பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளித் திடலில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மாயாவதி ஆறுதல் கூறினார்.

இந்த நிகழ்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னை விமானம் நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக பெரம்பூர் வந்த மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் தனது வீட்டின் கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை இரவு பார்வையிடச் சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் - நயினார் ஆலோசனை! 56 தொகுதிகள் கேட்கும் பாஜக?

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

SCROLL FOR NEXT