பட்டாசு ஆலையில் வெடி விபத்து. (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

DIN

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று(ஜூலை 8) வழக்கம்போல் பணிக்கு வந்த பட்டாசு ஆலை தொழிலாளர்கள், மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, உராய்வுக் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான நிலையில், காயமுற்ற 2 தொழிலாளர்கள் சிவகாசி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT