ஹிங்கோலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு
ஹிங்கோலி (மகாராஷ்டிரம்): மகாராஷ்டிரம் மாநிலம், ஹிங்கோலி பகுதியில் புதன்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது
ஹிங்கோலி (மகாராஷ்டிரம்): மகாராஷ்டிரம் மாநிலம், ஹிங்கோலி பகுதியில் புதன்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம், ஹிங்கோலி பகுதியில் புதன்கிழமை காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
Advertisement
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.