கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 13 தமிழக மீனவர்கள் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

DIN

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர்.

அத்துடன் மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

கைது செய்யப்பட்ட 13 மீனவர்களை இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்வது தொடர் கதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT