தற்போதைய செய்திகள்

தலைவரின் கண் அசைவுக்காகத்தான் பொறுமை காக்கிறார்கள்: அமைச்சர் கீதா ஜீவன்

தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

DIN

தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியது:

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி தமிழ் வளர்ச்சி உள்பட மகளிர் வாழ்வாதாரம், திருநங்கைகள் வாழ்வாதாரம் என பல்வேறு வளர்ச்சிகளுக்காக பாடுபட்டவர். அத்தனை மதிப்புமிக்க ஒரு தலைவரை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது மேடைகளில் தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது.

மேலும், அவரது கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு பேசி வருவதை திமுக சார்பில் கண்டிக்கிறோம். ஒரு கட்சித் தலைவருக்கு உள்ள எந்த தகுதியும் இல்லாமல் மாற்றுக் கட்சியினரை தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக சீமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக மாறி மாறி பச்சோந்தித்தனமாக பேசி வருகிறார்.

அவரது பேச்சில் ஒரு நிதானம் இல்லை. எனவே அவரின் மனநிலையை சோதிக்க வேண்டும். இளைஞர்களை தவறான திசைக்கு அழைத்துச் செல்கிறார்.

அவரது பேச்சு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

தமிழகத்தில் குற்ற செயல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துதான் வருகின்றது. திமுக ஆட்சியில் மட்டும்தான் நடந்து வருவதாக குறை சொல்வது நல்லது அல்ல.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கருத்துரிமை பறிக்கப்படுவதாகக பேசுகின்றனர். சாட்டை துரைமுருகன் பேசியதை கேட்டு இருந்தால் அப்படி சொல்லமாட்டார்கள்.

இரண்டாவது இடத்தில் பாஜகவா, நாம் தமிழர் கட்சியா என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன பதில் சொல்ல போகின்றார் என்று தெரியவில்லை. இதனாலையே மக்கள் தொடர்ந்து தமிழக மக்கள் அவரை நிராகரித்து வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனிப் பழமே... அபர்ணா தாஸ்!

விமர்சிக்கப்படும் சாய் அபயங்கர் டூட் பாடல்!

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

SCROLL FOR NEXT