கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரம்: அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது!

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

காவிரி நீா் விவகாரம் தொடா்பாக, சட்டப் பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் தொடங்கியுள்ள இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இக்கூட்டத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஒ.எஸ். மணியன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக ஜி.கே. மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் , பாஜக சார்பில் கரு. நாகராஜன், கரு. முருகாநந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், சிபிஎம் நாகை மாலி, சிபிஐ தளி ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது.

காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினருடன் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநா்களின் கருத்துகளும் கோரப்படும் என்றும், இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (29-11-2025)

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன்

கரூரில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு!

உச்சகட்ட பொறுப்பின்மை! “தவெக தலைவர் ஆறுதல்கூட சொல்லாமல்...!” Kanimozhi M.P. | TVK | VIJAY | DMK

38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!

SCROLL FOR NEXT