முகப்பு
தற்போதைய செய்திகள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் ஆள்மாற்றம்! மீனாவுடன் மீண்டும் அதே முகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் செந்தில் பாத்திரத்தில் நடித்துவந்த வசந்த் வசி மாற்றப்பட்டுள்ளார்.

Updated On : 19 ஜூலை 2024, 6:03 pm IST
பகிர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் செந்தில் பாத்திரத்தில் நடித்துவந்த வசந்த் வசி மாற்றப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோரஸ் -2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டது. 5 ஆண்டுகள் வரை ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisement

Advertisement

இத்தொடரின் இரண்டாம் பாகம் அப்பா - மகன்கள் பாசத்தை வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பின்னணியாக வைத்து தற்போது கதை நகர்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 ஆம் பாகத்தில் செந்தில் பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வசந்த் வசி. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், நடிகர் வசந்த் வசி இத்தொடரிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் ஜீவா பாத்திரத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் வெங்கட் ரங்கநாதனுக்கு ஜோடியாக ஹேமா நடித்திருந்தார். இவர்களின் இணை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இவர்கள் இணையவுள்ளனர்.

முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் தொடரில் பிரதான வேடத்தில் வெங்கட் ரங்கநாதன் நடித்திருந்தார். இத்தொடர் டிஆர்பியில் பின் தங்கியிருந்ததால் விரைவில் நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.