பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு நடிகைகள் இணையும் மகா சங்கமம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 மற்றும் அழகே அழகு தொடர்களில் நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளது குறித்து...
பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 மற்றும் அழகே அழகு தொடர்களில் நடிகர், நடிகைகள் இணைந்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். இந்த இரு தொடர்களின் மகா சங்கமம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
சின்ன திரை தொடர்களுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் மகா சங்கமம் என்ற பெயரில் இரு தொடர்களின் நடிகர், நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிப்பது வழக்கமாகி வருகிறது.
தொடர்களின் கதை மாறாமல், கதாபாத்திரங்கள் மாறாமல் இரு தொடர்களின் பாத்திரங்களும் சந்தித்துக்கொண்டு கதை நகர்த்தப்படும். இதன்மூலம் இரு தொடர்களுக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரின் பார்வையாளர்கள், அழகே அழகு தொடரால் ஈர்க்கப்படலாம், இதேபோன்று அழகே அழகு தொடரின் ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தொடர்ந்து பார்க்க நேரிடலாம் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 7.30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடரில் அன்ஷிதா, நக்ஷத்திரா, பிரேம் ஜேக்கப், குணா, குறிஞ்சி நாதன், மதன் குமார், சுனிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதேபோன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 தொடரில் நடிகை நிரோஷா, ஸ்டாலின் முத்து, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ், வி.ஜே.தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இரு தொடர்களின் மகா சங்கமம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pandian Stores Azhage Azhagu Unite for maga sangamam in vijay tv
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.