மருத்துவ முகாமை தொடங்கி வைத்தும் பேசும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி. 
தற்போதைய செய்திகள்

கோவையில் பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம்!

கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம்

DIN

கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மற்றும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பத்திரிகையாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.

நிகழ்ச்சிக்கு ஹிந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் டாக்டர் சதீஷ் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களுக்கான குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT