ராயன் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி!
தனுஷின் ராயன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!
ராயன் திரைப்படத்தின் நாளை மறுநாள்(ஜூலை 26) சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், வெளியீட்டு தேதி ஜூலை 26 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ராயன்' படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு, தணிக்கை வாரியம் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.
இந்நிலையில், ராயன் திரைப்படத்துக்கு சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாளை மறுநாள்(ஜூலை 26) காலை 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.