மேட்டூர் அணை 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: குறைந்த நீர்வரத்து!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 62,870 கன அடி!

DIN

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 62,870 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,53,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுவென உயர்ந்து வந்தது.

நேற்று மேட்டூர் அணை நிரம்பும் என்று எதிர்பார்த்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 62,870 கன அடியாக குறைந்தது.

அணையின் நீர்மட்டம் 118.84 அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 91.63 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு இன்று பிற்பகலில் தண்ணீர் திறக்கப்படுகிறது. கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலப் பாசன வசதி பெறுகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்தும் திருப்திகரமாக இருப்பதால் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT