நீலகிரி, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(ஜூலை 30) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக தொடா்ந்து பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக மழையின் தாக்கம் குறைந்து சூறாவளி காற்று வீசியதால், பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள், கடைகள் மற்றும் சாலைகளின் குறுக்கே மரங்கள் வேரோடு முறிந்து விழுந்ததால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.