கஜன் சிங் 
தற்போதைய செய்திகள்

பாலியல் புகாரில் சிஆர்பிஎஃப் டிஐஜி பணிநீக்கம்!

பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி கஜன் சிங் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

DIN

பாலியல் புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) டிஐஜியை பணிநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிஆா்பிஎஃப் படை டிஐஜி கஜன் சிங் தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக அப்படையைச் சோ்ந்த பெண்கள் சிலா் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து மே 30 அன்று வெளியிடப்பட்ட உத்தரவில் அவரைப் பணியில் இருந்து நீக்குவதாகவும், மே 31-ல் இருந்து அந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதலுடன் கடந்த மாதங்களில் அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்குப் பின் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கஜன் சிங், இந்தக் குற்றச்சாட்டுகள் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த உருவாக்கப்பட்டவை என்றும், இவை முற்றிலும் பொய்யானது என்றும் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன், சிஆா்பிஃப் உள்புகாா்கள் குழு மேற்கொண்ட விசாரணையில், கஜன் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையை ஏற்ற சிஆா்பிஎஃப் தலைமையகம், அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அந்த அறிக்கையை அனுப்பியது. அதன் பின்னர் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில் கஜன் சிங் மீது இரண்டு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சிஆா்பிஎஃப் படையின் முன்னாள் தலைமை விளையாட்டு அதிகாரியாக இருந்த கஜன் சிங், 1986-ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றாா். அதுவே ஆசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கமாகும்.

சுமார் 3.25 லட்சம் பேர் கொண்ட சிஆர்பிஎஃப் படையில், 1986 ஆம் ஆண்டு முதல் பெண்கள் போர் படையில் சேர்க்கப்பட்டனர். தற்போது, மொத்தம் 8,000 பணியாளர்களைக் கொண்ட ஆறு பெண் படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT