முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஜூன், 2024 at 3:14 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

அடுத்த 3 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று (ஜூன் 2) 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →