கொல்கத்தா நைட் ரைடா்ஸ் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், ஸ்ருதி ரகுநாதனை கரம் பிடித்தார்.
வெங்கடேஷ் ஐயர், ஸ்ருதி ரகுநாதன் நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தினார்.
2024 ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடிய இவர் 370 ரன்கள் எடுத்தார்.
அதில் நான்கு அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல்-லில் கொல்கத்தா அணி வெற்றி வாகை சூடிய நிலையில் வெங்கடேஷ் ஐயர், ஸ்ருதி ரகுநாதனை இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருமணம் செய்து கொண்டார்.
இருவரது திருமணமும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
வெங்கடேஷ் ஐயர், ஐபிஎல்லில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.