முகமது ஹனீபா 
தற்போதைய செய்திகள்

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலை

லடாக் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

DIN

லடாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் போட்டியிட்ட முகமது ஹனீபா, காங்கிரஸைவிட 28,000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 60,365 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் செரிங் நம்கியால் 32,195 வாக்குகளும், பாஜகவின் தாஷி கியால்சன் 24,953 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

லடாக் மக்களவைத் டொகுதியில் 2014 , 2019 ஆம் ஆண்டில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் அதிகபட்சமாக ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளராக நம்கியாலை நிறுத்திய பிறகு, முன்னாள் தேசிய மாநாட்டுத் தலைவரான முகமது ஹனீபா, சுயேச்சையாகப் போட்டியிடுவதற்காக அக்கட்சியிலிருந்து விலகி போட்டியிட்டார். ஷியா முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் கார்கில் பகுதியில் இவர் மட்டுமே போட்டியிடுகிறார்.

2019 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்து யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்ட பிறகு லடாக் பகுதியில் நடைபெறும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும்.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 6 சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவிடம் ஆசியக் கோப்பை ஒப்படைக்க பாகிஸ்தான் அமைச்சர் நிபந்தனை!

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

SCROLL FOR NEXT