முகப்பு
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Updated On : 6 ஜூன், 2024 at 3:12 AM
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் ஜூன் 9 வரை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் ஜூன் 6-ஆம் தேதி கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →