கோவில்பட்டியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட மீன் வியாபாரி வெள்ளத்துரை மற்றும் சாமி. 
தற்போதைய செய்திகள்

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை: போலீஸார் விசாரணை

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

கோவில்பட்டியில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் வெள்ளத்துரை (50). கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே மீன்கடை நடத்தி வரும் இவர், இரவில் மீன் கடையில் தூங்குவது வழக்கமாம்.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலிருந்து சிறுது தூரம் ஓடி வந்த நிலையில் சாலையில் இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து இரண்டு சடலங்களும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமோப்பநாய்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் காவல்துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கான நிதியை குறைத்தது ஏன்?

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

SCROLL FOR NEXT