புதுதில்லி: நீட் தேர்வு முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமாகி வரும் நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உத்தரப்பிரேசம் மாநிலம் வாரணாசியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நீட் தேர்வு பணம் வாங்கிக்கொண்டு நடத்தப்படுகிறது. இத்தகைய முறைகேடு குறித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். எனவே மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மகாராஷ்டிர அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 6 தேர்வு மையங்களில் மட்டும் தான் பிரச்னை நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால் மறு தேர்வு நடத்த வேண்டியதில்லை.
நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உயர்கல்வித் துறை செயலாளர், முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
30 நிமிடங்கள் தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதால் மைனஸ் மதிப்பெண் பெற்றவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் 718, 719 மதிப்பெண்களும், 6 பேர் முழு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கருணை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.
நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரைப்படிதான் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது.
24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 1600 மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படையாகவே உள்ளன.
மேலும் நீட் வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என புகார் எழுந்ததை அடுத்து யுஜிசி முன்னாள் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்படும்.
அந்த குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.