குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தமிழர்கள் உள்பட 45 பேர் உயிரிழந்தவர். அவர்களில் கேரளம், தமிழகம் மற்றும் கர்நாடகத்தை சேர்ந்த 31 பேரின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் வெள்ளிக்கிழமை கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர்கள், கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும் தமிழக ஆம்புலன்ஸ்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து இன்று காலை கொச்சி புறப்பட்டுச் சென்ற செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடலைப் பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், குவைத்தில் தீ விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்களா என்பது குறித்து மத்திய அமைச்சகத்திடம் தகவல்கள் கேட்டுள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.