தற்போதைய செய்திகள்

தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

DIN

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 14) சந்தித்துள்ளார்.

தமிழிசை செளந்தரராஜனை சந்தித்ததை தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதில் அவர், “இன்றைய நாள், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை செளந்தரராஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசை செளந்தரராஜனின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்து, சமூக ஊடகங்களில் சர்ச்னையானது.

இந்நிலையில், அமித் ஷா உடன் பேசியது தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் நேற்று(ஜூன் 13) விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜனை சந்தித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT