முகப்பு
தற்போதைய செய்திகள்

காலமானார் ஏ.சுரேஷ்குமார்

தினமணி நாளிதழ் தருமபுரி பதிப்பின் பக்க வடிவமைப்பாளர் ஏ.சுரேஷ்குமார்(40) உடநலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

Updated On : 14 ஜூன், 2024 at 11:35 AM
ஏ.சுரேஷ்குமார்
பகிர்:

வேலூர்: தினமணி நாளிதழ் தருமபுரி பதிப்பின் பக்க வடிவமைப்பாளர் ஏ.சுரேஷ்குமார்(40) உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பக்க வடிவமைப்பாளர் ஏ.சுரேஷ்குமார்(40). இவர் தீவிர உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

இவருக்கு தந்தை அந்தோணி, சகோதரர்கள் தினமணி வாணியம்பாடி செய்தியாளர் ராஜேஷ்‌, ஜான்பால், ரமேஷ், சகோதரி அனிதாமேரி உள்ளனர்.

Advertisement

இவரது உடல் சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாணியம்பாடி அருகே உதயேந்திரம் கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு:70105 22346, 9962636194.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.