புது தில்லி: தலைநகர் தில்லியின் வசந்த் விஹார் பகுதியில் உள்ள கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர்சேதமோ, யாருக்கும் காயமேற்படவில்லை என அதிகாரிகள் கூறினா்.
இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் கூறுகையில், வசந்த் விஹார் பிளாக் சி பகுதியில் உள்ள கடையில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர் பல தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தீயணைப்பு இயக்குனர் அதுல் காா்க் தெரிவித்தார்.
முன்னதாக, வடக்கு தில்லியின் ‘சாந்தினி செளக்கின் மாா்வாரி கத்ரா பகுதியில் உள்ள கடையில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 110-120 கடைகள் எரிந்து நாசமானது.
தீ விபத்தின் போது அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்றி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க தேவையான உதவிகள் செய்தனர்.
தீ மற்றும் அதை அணைக்க தீயணைப்புத் துறையினர் அடித்த நீரால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சந்தையின் பின்புறம் உள்ள கட்டடம் இடிந்து விழுந்தது.
தீயை அணைக்கும் பணியின் போது ஒரு தீயணைப்பு வீரருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.