விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சனிக்கிழமை காலை பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். 
தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

DIN

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்.6-ஆம் தேதி திடீரென மறைந்ததை தொடா்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நிலையில், இடைத்தோ்தல் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக சார்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுகிறாா் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT