தற்போதைய செய்திகள்

பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளனர்.

DIN

முஸ்லிம்களின் பக்ரீத் பெருநாள் ஜூன் 17 -இல் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக)

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புமணி ராமதாஸ் (பாமக)

இறைபக்தியை வலியுறுத்தும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)

தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை முதல்வர்

பக்ரீத் பண்டிகை கொண்டாடும் புனித நாளில் அனைவரது குடும்பத்திலும் அமைதி, செழிப்பு மற்றும் கொண்டுவரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT