தற்போதைய செய்திகள்

ராகுல் காந்தி பிறந்த நாள்: பிரியங்கா வாழ்த்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு, அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளுக்கு, அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “என் இனிய சகோதரருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க்கை, உலகம், எல்லாவற்றையும் பற்றிய தனித்துவமான பார்வை பாதையை ஒளிரச் செய்கிறது.

எப்போதும் என் நண்பர், என் சக பயணி, வழிகாட்டி, தத்துவஞானி மற்றும் தலைவராக இருக்கிறீர்கள். ஜொலித்துக் கொண்டே இருங்கள். உங்களை மிகவும் நேசிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது பிறந்த நாளை தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோக நாயகி... கல்யாணி பிரியதர்ஷன்!

சினிமா வாரிசுகள் புதியவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கிறார்களா? துல்கர் சல்மான், ராணா பதில்!

திருப்பதியில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

ஹிப்ஹாப் ஆதி இசை - ரஜினி நடனம்: வைரலாகும் ரீல்ஸ்கள்!

கார்மேகக் குழலி... சைத்ரா ஆச்சார்!

SCROLL FOR NEXT