முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி, ராணுவத்தை அவமதிக்க முயற்சிக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத்தில் சீன ஆக்கிரமிப்பு ராகுல் காந்தி பேசியது பற்றி பிரியங்கா காந்தி கருத்து...

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:11 AM
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி - ANI
பகிர்:

பாஜக மறைக்க விரும்பும் விஷயங்கள் வெளியே வரும்போதெல்லாம் இப்படித்தான் நடக்கிறது என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜன. 28, புதன்கிழமை தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "வெளியிடப்படாத, நம்பகத்தன்மையற்ற ஒரு புத்தகத்தில் இருந்த கருத்துகளை மேற்கோள் காட்ட முடியாது” என்றார்.

பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து பேச முடியவில்லை. இதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். உடனடியாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி,

"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராணுவத்தை அவமானப்படுத்த முயற்சிக்கவில்லை. அவர் ராணுவத் தளபதியின் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசித்தார். பாஜக மறைக்க விரும்பும் ஏதேனும் ஒரு விஷயம் வெளிவரும்போதெல்லாம் அவர்கள் இதைத்தான் கூறுகிறார்கள்" என்றார்.

summary

Rahul Gandhi was not trying to defame the Army: Priyanka Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.