பவதாரணி குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை- யுவன்
பவதாரணி குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்ததில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. இப்பாடலை கம்போஸ் செய்யும்போது நானும் வெங்கட் பிரபும், இது தங்கைக்கான பாடல் என உணர்ந்தோம்.
அவள் மருத்துவமனயில் இருந்து வந்ததும் பாட வைத்து பதிவு செய்யலாம் என நினைத்தோம்.
Advertisement
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவளின் குரலை இப்படி பயன்படுத்துவோம் என கற்பனை கூட செய்தததில்லை.
இப்பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுவன் இசையில் நடிகர் விஜய், ஏஐ உதவியுடன் மறைந்த பாடகி பவதாரணி குரலில் கபிலன் வைரமுத்து வரிகளில் உருவாகியுள்ள கோட் படத்தின் 2வது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்' பாடல் இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.