கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடிய மதுப்பிரியர். 
தற்போதைய செய்திகள்

மதுவை கீழே ஊத்தாதீங்க.. போராட்டத்துக்கு நடுவே கெஞ்சிய மதுப்பிரியர்!

மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடிய மதுப்பிரியர்.

C Vinodh

மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, மதுப்பிரியர் ஒருவர் மதுவை 'கீழே ஊத்தாதீங்க' என கடுமையாக போராடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து திமுகவினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர், மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

அப்போது, பாஜகவினர் கீழே கொட்டியதை பார்த்த மதுபிரியர் ஒருவர் மதுவை 'கீழே ஊத்தாதீங்க' என கடுமையாக போராடினார்.

இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

SCROLL FOR NEXT