கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை: எடப்பாடி பழனிசாமி

ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

ஆளுங்கட்சி ஆதரவுடன் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

பேரவையில் இருந்து புறப்பட்டு அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளசாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஆளுங்கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்திருக்க முடியாது. ஒரு நபர் ஆணையம் அமைத்தாலும், அதன்மீது மக்கள் மத்தியில் பெரிதாக நம்பகத்தன்மை ஏற்படவில்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலகங்களுக்கு அருகிலேயே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் கள்ளச்சாராயம் தொடர்பாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்துக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

வியக்க வைக்கும் விஎஃப்எக்ஸ்... மிராய் டிரைலர்!

தில்லி பிரீமியர் லீக்: அறிமுகப் போட்டியில் அசத்திய ஆர்யவிர் சேவாக்!

SCROLL FOR NEXT