ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்!
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை பதிவு செய்த நில மோசடி தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு தற்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி ஹேமந்த் சோரன், குற்றவாளி இல்லையென்றும், அவர் ஜாமீனில் இருக்கும் போது குற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றும் அவரது வழக்குரைஞர் அருணாப் சௌத்ரி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் முன்வந்துள்ளது.
ஹேமந்த் சோரன் தற்போது ஜார்க்கண்டின் பிர்ஸா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.