தற்போதைய செய்திகள்

அதர்வாவுடன் இணையும் பிரபல இயக்குநர் மகள்!

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் இயக்குநர் சங்கரனின் மகள் அதிதி சங்கர் இணைந்துள்ளார்.

DIN

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா முரளி. இவர் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஹாட்ஸ்டாரில் வெளியான மத்தகம் தொடர், ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்த நிலையில், மத்தகம் இணையத் தொடரின் 2 ஆம் பாகமும் வெளியானது.

இவரின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை அதிதி சங்கர் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். எம் ராஜேஷ் இப்படத்தை இயக்க சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இப்படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக ஸ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT