5 விக்கெட்டுகள் எடுத்த நியூசி. வீரர் க்ளென் பிலிப்ஸ்.  Andrew Cornaga
தற்போதைய செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட்டில் சுவாரசியம்: அதிக ரன்களெடுத்த பௌலர்; அதிக விக்கெட்டுகளெடுத்த பேட்டர்!

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் வெலிங்டன் டெஸ்ட்டில் சுவாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

DIN

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் வெலிங்டன் டெஸ்ட்டில் சுவாரசியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸி. 3-0 என அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நியூசி. உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பிப்.29ஆம் தேதி வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பௌலிங்கை தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸி. 383 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆட்டமிழக்காமல் 174* ரன்கள் எடுத்து, தனியொருவனாக ஆஸி. அணியை தூக்கி நிறுத்தினார் கேமரூன் கிரீன். அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 43.1 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 71 ரன்களும் மாட் ஹென்றி 42 ரன்களும் எடுத்தனர்.

2வது இன்னிங்ஸில் ஆஸி. அணி மோசமாக விளையாடியது. 51.1 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 3ஆம் நாள் முடிவில் 41 ஓவர்களுக்கு 111/3 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசி. வெற்றிபெற இன்னும் 258 ரன்கள் தேவை. ஆஸி. வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவை.

இந்த டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்:

  • ஆஸி. 2ஆவது இன்னிங்ஸில் ஆஸி. பேட்டர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. பௌலரான நேதன் லயன் அதிகபட்சமாக நேதன் லயன் 41 ரன்கள் எடுத்தார். மேலும் இதுவரை நிகழ்ந்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் (1501) எடுத்தவர் பட்டியலில் நேதன் லயன் முதலிடத்தில் இருக்கிறார்.

  • அதேசமயம் நியூசிலாந்தில் பேட்டரான க்ளென் பிலிப்ஸ் 16 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

  • மேட் ஹென்றி டாம் லேதம், வில்லியம்சனை விட அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

  • நேதம் லயன் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேனை விடவும் அதிக ரன்கள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT