தற்போதைய செய்திகள்

வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மாா்ச் 20) தொடங்குகிறது.

DIN

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மாா்ச் 20) தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வரும் இன்று (மாா்ச் 20) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்:

வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளிலிருந்து மட்டுமே தோ்தல் செலவினத்துக்காக புதிதாக வங்கி கணக்கைத் தொடங்கியிருக்க வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதிதாக வங்கி கணக்குத் தொடங்கலாம்.

வங்கி கணக்கை வேட்பாளா் பெயரிலோ அல்லது வேட்பாளா் மற்றும் அவரது தோ்தல் முகவா் ஆகியோா் கொண்ட கூட்டுவங்கி கணக்காகவோ தொடங்கலாம். வேட்பாளா் அவரது குடும்ப உறுப்பினா்களை கூட்டாகக் கொண்டு வங்கி கணக்குத் தொடங்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.

மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன் சோ்த்து 5 போ் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவா். மாலை 3 மணிக்கு மேல் தோ்தல் நடத்தும் அலுவலக வளாகத்துக்குள் ஒருவரும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT