மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதில் தீப்பற்றி ஏரியும் கச்சேரி அரங்கம். 
தற்போதைய செய்திகள்

மாஸ்கோ தீவிரவாத தாக்குதலுக்கு 60 பேர் பலி; 145 பேர் காயம்

மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் 145 பேர் காயமடைந்தனர்.

DIN

மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் 145 பேர் காயமடைந்தனர்.

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவிற்கு அருகில் வெள்ளிக்கிழமை குரோகஸ் சிட்டி ஹால் கச்சேரி அரங்கிற்குள் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், கச்சேரி அரங்கிற்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய ஒரு மர்ம கும்பல் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது மற்றும் அரங்கிற்கு தீ வைத்துவிட்டு பின்னர் அவர்கள் "வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது."

இந்த தாக்குதலலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இதுதொடர்பான எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் மற்றும் 145 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், மாஸ்கோவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இது. இந்த தாக்குதலில் மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று ரஷிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது..

5 குழந்தைகள் உட்பட 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 60 பேர் ஆபத்தான நிலையில் திவீர சிகிச்சை வேண்டிய நிலையில் உள்ளனர் என்று ரஷிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இரத்த தானம் செய்யுமாறு மாஸ்கோ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ்- என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு-கொராசன் குழுவின் கிளை, மார்ச் மாதத்தில் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரித்த அமெரிக்கா உளவுத்துறை, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத குழுவினர் ரஷியாவில் செயல்பட்டு வருவதாக ரஷிய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பொது எச்சரிக்கையைத் தாண்டி அமெரிக்கா மாஸ்கோ அதிகாரிகளுக்கு எந்தயளவிற்கு முன்னெச்சரிக்கை தகவல் கொடுத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முன்னதாக, ஈரானின் முன்னாள் தலைமை ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 103 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 211 பேர் காயமடைந்தனர், இந்த தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றது. இது ஜனவரியில் இரட்டை குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக ஈரானில் ஐஎஸ்ஐஎஸ் பங்கரவாதக் குழு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்திருந்ததாக தகவல்கள் வெளியான குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT