முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி?

ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 24 மார்ச், 2024 at 9:56 AM
பகிர்:

ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் கணேசமூர்த்தி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி 2019 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் ஈரோடு தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் தார்மீக அடிப்படையில் தேர்தல் பணிகளில் கணேசமூர்த்தி ஈடுபட்டு வந்தார்.

இந்த சூழ்நிலையில், கணேசமூர்த்தி கடந்த ஒருவாரமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →