தற்போதைய செய்திகள்

சித்தார்த் - வினுஷாவின் புதிய தொடர் அறிவிப்பு!

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து பிரபலமான வினுஷா மற்றும் சித்தார்த் நடிக்கும் புதிய தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து ரோஷினி விலகிய பின்பு, வினுஷா தேவி கண்ணம்மா பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, பாரதி கண்ணம்மா 2 ஆம் பாகத்திலும் அவரே நடித்தார்.

இத்தொடரில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் வினுஷா. இதனைத் தொடர்ந்து, இவர் பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்த நிலையில், நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்கும் புதிய தொடரில் நாயகியாக வினுஷா தேவி இணைந்துள்ளார். இத்தொடருக்கு பனி விழும் மலர்வனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சித்தார்த் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜவே தொடரின் 2 ஆம் பாகத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் சரவணன் மீனாட்சி -2, யாரடி நீ மோகினி, தேன்மொழி பிஏ உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ல் வெளியான அகுடு படத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார்.

வினுஷா மற்றும் சித்தார்த் நடிக்கும் புதிய தொடரில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் ரவி மற்றும் ஈரமான ரோஜாவே தொடர் நடிகர் ரயான் நடிக்கிறார்கள்.

பனி விழும் மலர்வனம் தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு நேரம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும்: கேஜரிவால்

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT