முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள்: தலைமைத் தேர்தல் அலுவலர்

தமிழகத்தில் இதுவரை ரூ.69.70 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:08 AM
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு
பகிர்:

தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது:

“தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 மூன்றாம் பாலினத்துவரும் அடங்குவர். முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.90 லட்சம்.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 68,144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் பறக்கும் படையினரால் நேற்றுவரை ரூ. 33.31 பணம், ரூ.33.35 கோடி மதிப்பிலான நகைகள், ரூ. 1.72 கோடி மதிப்பிலான மதுபானங்கள் உள்பட மொத்தம் ரூ.69.70 கோடி மதிப்பில் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.”

முழு கட்டுரையைப் படிக்க →