லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த செம்மறி ஆடுகள்.
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். 
தற்போதைய செய்திகள்

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

DIN

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் செம்மறி ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் பலியாகின.

சிவகங்கையைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமான 200 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம் மணலூர் கிராமத்திற்கு ஆடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

லாரி கீழ்வேளூர் அருகே உள்ள மணலூர் மேலக்கரை சாலை பகுதியில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி கவிழந்ததில் 75-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் நிகழ்விடத்திலேயே இறந்து விட்டன. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் மணி காயமின்றி உயிர்தப்பினார்.

விபத்து குறித்து கீழ்வேளூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பலியான ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

உதகை தொட்டபெட்டா சிகரம் செல்லத் தடை!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT