தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை -பிரதமர் நரேந்திர மோடி  
தற்போதைய செய்திகள்

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

DIN

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து தவறான பிரசாரம் செய்து வருவதாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி மதக் கலவரத்தை உருவாக்க முறிச்சித்து வருவதாகவும், தொடர்ந்து இஸ்லாமியர்கள் குறித்து தவறான கருத்துகளை பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில் பிரதமரின் பெயரை சேர்த்திருப்பதால் பட்டியலிட மறுப்பதாக காங்கிரஸ் வழக்குரைஞர்கள் நீதிபதிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சரி செய்து மீண்டும் மனுத்தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

SCROLL FOR NEXT