கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

DIN

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை கேஜரிவால் இன்று சந்திக்கிறார்.

இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:

அதில், " காலை 11 மணி - எம்எல்ஏக்கள் கூட்டம், மதியம் 1 மணி - கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு, மாலை 4 மணி - வாகனப் பேரணி, புது தில்லி மக்களவைத் தொகுதி - மோதி நகர் பகுதியில் மாலை 6 மணிக்கு வாகனப் பேரணி, மேற்கு தில்லி மக்களவைத் தொகுதி - உத்தம் நகர் பகுதியில் வாக்கு சேகர்ப்பு."

கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் தில்லி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

திகார் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளிவந்த தில்லி முதல்வர் கேஜரிவால் தலைநகரில் உள்ள கனாட்பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் நேற்று வழிபாடு செய்தார்.

பின்னர், கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்குச் சென்று அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன்பிறகு, தெற்கு தில்லியில் தேர்தல் பிரசார வாகனப் பேரணிகளில் பங்கேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

SCROLL FOR NEXT