IIT 
தற்போதைய செய்திகள்

வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களின் சராசரி ஊதியம் ரூ.22 லட்சம்: ஐஐடி சென்னை

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) சென்னை தனது பிடெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களில் 80%-க்கும் அதிகமானவர்களையும், இந்தாண்டு 75% முதுகலை மாணவர்களையும் பணிகளில் நியமித்துள்ளதாக அறிவித்தது.

DIN

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) சென்னை தனது பிடெக் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு மாணவர்களில் 80%-க்கும் அதிகமானவர்களையும், இந்தாண்டு 75% முதுகலை மாணவர்களையும் பணிகளில் நியமித்துள்ளதாக அறிவித்தது.

2023-24 வேலைவாய்ப்புகளின் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களில், 1,091 மாணவர்கள் 256 நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். கூடுதல் தகவலாக, 300 முன்பணியமர்த்தல் வாய்ப்புகளில் 235, மாணவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

”ஜப்பான் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நிறுவனங்களின் மூலம் பயிலும் மாணவர்களுக்கு 44 வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், இந்த இரண்டுகட்ட வேலைவாய்ப்புகளின் போது 85 தொடக்க நிறுவனங்கள் 183 வேலைவாய்ப்புப் பணிகளை வழங்கின.

இந்தாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.19.6 லட்சம் முதல் ரூ.22 லட்சமாகவும் இருக்கும். ஐஐடி மெட்ராஸில் உள்ள தொழிற்பாதை மையம், மாணவர்கள் அனைத்து வேலைவாய்ப்புமையங்களை ஆராயவும், பல்வேறு வேலைவாய்ப்புகளை அடையாளம் காணவும் உதவுகிறது” என்று ஐஐடி மெட்ராஸ் கல்வித்தலைவர் சத்யநாராயண கும்மாடி கூறினார்.

43% மாணவர்கள் முக்கியத் துறையிகளிலும், 20% மென்பொருள் துறையிலும், பகுப்பாய்வு, நிதி, ஆலோசனை மற்றும் தரவு அறிவியலில் தலா 10%-க்கும் குறைவாகவும் உள்ளனர்.

”இரண்டு ஆண்டுகளில், ஐஐடி சென்னை பிடெக் மற்றும் இரட்டை பட்டதாரிகளில் 90% பேர் பட்டமளிப்பு விழாவின்போது வேலைவாய்ப்புகளைக் கண்டனர். 2024 பட்டமளிப்பு விழாவிற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ள நிலையில், இந்தாண்டு மீண்டும் புதிய இலக்கினை எட்டுமென நிறுவனம் நம்புகிறது” என்று ஐஐடி சென்னை இயக்குநர் வீழிநாதன் காமகோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று கிருஷ்ணகிரிக்கும் நாளை நீலகிரிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை!

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! டொனால்ட் டிரம்புக்கு ஏமாற்றம்

இட்லி கடை படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்: தமிழக பாஜக

உங்கள் பணம் பறிபோகலாம்! போலி நீதிமன்ற உத்தரவு மோசடி எச்சரிக்கை!!

மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் ஆய்வக உதவியாளர் வேலை!

SCROLL FOR NEXT