தற்போதைய செய்திகள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேரை தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வழங்குவதாகக் கூறியது. இதை நம்பி இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சுமாா் 1 லட்சம் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 438 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான ரூசோ உட்பட 10-க்கும் மேற்பட்டோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். பின்னா் ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவானாா். அவா் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கியிருந்தனா் மேலும்,நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிளை நிறுவன உரிமையாளர் அருண்குமார், அவரது மனைவியையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனா்.

ஆவடியில் கிளை நிறுவனத்தை தொடங்கி ரூ.134 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே தலைமறைவாக இருந்த இயக்குநா்களில் ஒருவரான ரூசோவையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT