தற்போதைய செய்திகள்

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் அக்கிராம மக்களின் தேவதையாக இருந்து வருவது செல்லியம்மன்.

இக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வி. கணேஷ் குருக்கள் தலைமையில் இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கின. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகா பூரணாகுதி தீபாராதனைகள் முடிந்து யாகசாலையில் இருந்து புனித நீர் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை அடுத்து சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இக்கோயிலில் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன்பாக கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.

அதன் பிறகு இன்று(மே 19) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவு பெற்ற பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை இத்திருக்கோயில் குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் திருமுக்கூடல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா, உத்தரமேருர் எம்எல்ஏ க.சுந்தர், எம்பி. க. செல்வம் ஆகியோர் உள்பட கிராம பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT