கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து ப

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டைகிடாயை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பூசாரி பழனிசாமி(45) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இது தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT