தற்போதைய செய்திகள்

தங்கம் விலை நிலவரம்: வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனை.

DIN

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், புதன்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

சென்னையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நகைகளுக்கு அதிக தேவையும், தங்க பிஸ்கட் மற்றும் தங்க வில்லைகளின் தேவை குறைவாகவும் உள்ளது.

கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை ரூ.53,240-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 6,740-க்கும், ஒரு சவரன் ரூ. 53,920-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளியின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101.50-க்கும், ஒரு கிலோ ரூ. 1,01,500-க்கும் விற்பனையான.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ. 6,775-க்கும், ஒரு பவுன் ரூ. 54,200-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,391-க்கு விற்பனையாகிறது.

புதிய உச்சத்தில் வெள்ளி விலை

அதேபோல், கிராமப்புற மக்களிடையே வெள்ளியின் மீதான தாக்கம் அதிகரித்துள்ளதால் வெள்ளியின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கடந்த 2 மாதங்களில் கிராமுக்கு ரூ.21 உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை கண்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெள்ளியின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.101.50-க்கும், ஒரு கிலோ ரூ. 1,01,500-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.1,02.20-க்கும், ஒரு கிலோவுக்கு 1,200 உயர்ந்து ரூ.1,02,200-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT