தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கை

2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும்

DIN

புதுதில்லி: 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என்றும், அதே நேரத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வறிக்கைத் துறை வெளியிட்டுள்ள அவிப்பில், 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் உலகளாவிய பொருளாதார பின்னடைவின் சாத்தியமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் துறைகளில் நிலையான வளர்ச்சிப் போக்கை காட்டுகிறது.

நாட்டில் நகர்ப்புற பொருளாதார வேகம், பயணிகள் வாகன விற்பனை, விமான நிலைய பயணிகள் போக்குவரத்து பயன்பாடு, ஜிஎஸ்டி வசூல், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், பெட்ரோலிய நுகர்வு மற்றும் சுங்கச்சாவடி வசூல் ஆகியவற்றில் வலுவான செயல்திறன் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது. மறுபுறம், கிராமப்புற பொருளாதார குறிகாட்டிகளும் நேர்மறையான போக்கைக் காட்டுகின்றன, டீசல் நுகர்வு மற்றும் இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி இன்னும் பரந்த அடிப்படையிலானதாக இருக்கும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT